• முகப்பு
  • இலங்கை
  • இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 17, 2024, 4:15:40 AM

சப்ரகமுவ மாகாணத்திற்குறிய இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை தெரிவித்தார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

என இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

original/img-20240517-wa0120
இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானூடான சந்திப்பு தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்கள் பலருடன் அதிகாரிகள் பலரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தானர்.


இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பட்டதாரிகள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.

original/img-20240517-wa0119
இந்த நிலையில் இம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களை புறக்கனித்து விட்டு இங்குள்ள தமிழ் டசாலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இவ் விடயத்தினை அமைச்சர் ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கோரிக்கையை முன் வைத்தனர்.

இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையக கல்வி வளர்ச்சியில் ஆரம்ப காலம் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காத செயற்பாடுகளை செய்து வருகின்றது.

original/img-20240517-wa0114
அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆளணி பற்றாக்குறையை தீர்க்க இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேநேரத்தில் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் விரைவில் உரிய தீர்வை பெற்று தருவதாக சந்திப்பில் கலந்து கொண்ட பட்டதாரிகளுக்கு மேலும் நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

VIDEOS

Recommended