• முகப்பு
  • இலங்கை
  • வங்குரோத்து நாட்டில் போராட்டங்கள் எதனையும் தராது - லால் காந்த

வங்குரோத்து நாட்டில் போராட்டங்கள் எதனையும் தராது - லால் காந்த

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 9, 2024, 3:50:37 AM

சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் நடத்தப்படும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த கூறுகிறார். 

கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக போராட்டங்கள் மற்றும் நடத்தப்பட வேண்டியிருந்தாலும், குழந்தைகளின் கல்வி மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். 

கண்டியில் நேற்று (08) இடம்பெற்ற ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் மாநாட்டில் உரையாற்றும் போதே லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.

எத்தகைய தொழில் முறைப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், இந்தத் துறைகளில் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடந்தால், பொதுமக்களின் எதிர்ப்பு நிச்சயம் இருக்கும். 

மருத்துவ வேலைநிறுத்தம் நடந்தபோது, ​​மக்கள் மருத்துவர்களின் வீடுகளைத் தாக்கினர். வாகனங்கள் கூட அடித்து நொறுக்கப்பட்டன. அதேபோன்று பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்காவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக பெற்றோர்கள் வீதியில் இறங்குகின்றனர். 

தற்போது பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால், குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டம், பிரச்சாரம்,என்பதை கடந்து ஆனால் உழைப்பது என்பதே எங்கள் நிலை.

வேலைநிறுத்தங்கள் இல்லாமல் உரிமை கோரல்களைப் பெற பல வழிகள் உள்ளன. பதில் வேலைநிறுத்தம் மட்டுமல்ல. குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

 இந்த நாட்டில் ஆளும் கட்சிகளை விட தொழிற்சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் அதிகம். இந்த நாட்டில் பெரும்பாலான மோதல்கள், பிளவுகள் மற்றும் நெருக்கடிகள் தொழிற்சங்கத் துறையில்தான் உள்ளன.

 முற்போக்கு, மாற்று, ஜே. வி. பி. யுஎன்பி, எஸ். ஜே. பி இலங்கை சம சமாஜம், கம்யூனிஸ்ட். இந்த நாட்டில் சுதந்திரமான தொழிற்சங்கங்கள் உட்பட எத்தனை தொழிற்சங்கங்கள் உள்ளன? இவை இணக்கமாக செயல்படுகின்றனவா? பிரிவுகள் உள்ளன. 

இலங்கையில் தொழிற்சங்கங்களில் பணியாற்றுவது எளிதல்ல. ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் வரும்போது தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க போராடுவது வழக்கம்.  

இந்த வங்குரோத்து நாட்டில் அரச ஊழியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதை போராட்டக்காரர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த இனவாத எதிர்ப்புக் குழுவை விரட்டியடித்து, ஜனரஞ்சக அரசு அமையாதவரை மக்களின் கோரிக்கைகள் வெற்றி பெறாது என்றும் அவர் இதான் போது கூறினார்.

 

VIDEOS

Recommended