• முகப்பு
  • இலங்கை
  • சர்வஜன அதிகாரம்" கூட்டணியின் மாவட்ட தலைமை வேட்பாளராக சட்டத்தரணி சாதிக்குல் அமீன்

சர்வஜன அதிகாரம்" கூட்டணியின் மாவட்ட தலைமை வேட்பாளராக சட்டத்தரணி சாதிக்குல் அமீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 18, 2024, 1:56:26 PM

எதிர்வருகின்ற  பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த "சர்வஜன அதிகாரம்" கூட்டணியின் மாவட்ட தலைமை வேட்பாளராக சட்டத்தரணி சாதிக்குல் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் தனது கல்வியை முடித்த பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த அவர், 28 வருடங்கள் தொழில் மற்றும் அரசியல் அனுபவம் கொண்டவர். சிலாபம் நகர சபையில் 5 தடவைகள் பிரதிநிதியாக செயல்பட்டு, 4 ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில் அவர் பிரதி நகர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

 மேலும், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பணிப்பாளராகவும் அவர் இருந்துள்ளார்.

original/img-20241018-wa0213
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ள அவர், தனது சிறந்த அரசியல் அனுபவம், சேவை ஆற்றல், ஆளுமை மற்றும் மும்மொழி திறனால், மாவட்டத்தில் முப்பெரும் சமூகங்களுக்கும் விருப்பத்திற்குரிய தலைவராகவும், இனங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாகவும் விளங்குகிறார்.



புத்தளம் பழைய எலுவாங்குளம் வயல் பகுதியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுது

 

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுயியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

 

குறித்த யானைக்குட்டி இன்று காலை முதல் சுகையீனமுற்ற நிலையில் உயிருடன் வீழ்ந்து கிடந்ததாகவும் பின்னர் பகல் ஒரு மணியளவில் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இவ்வாறு உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது மதிக்கத்தக்கதாக இருப்பதாக இதன்போது தெரிவித்தனர். 

 

நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்குட்டிக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

VIDEOS

Recommended