மஹியங்கனை 50ம் கட்டை உக்வகாவ பகுதியில் கஞ்சா செடிகளுடன் கைது
ராமு தனராஜா
UPDATED: Oct 27, 2024, 4:16:54 AM
மஹியங்கனை 50ம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்ஞா செடிகளும் 1 கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
உக்வகாவ, குடாஓய , வெலென் பெல,மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பணம் கொடுத்து கஞ்சா கொள்வதற்கு செய்வதற்காக மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரிடம் 10 கிராம் காய்ந்த கஞ்சாவை கொள்வனவு செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரின் சேனையில் மானா செடிகளுடன் சுமார் 5 அடி உயரமான கஞ்சா செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல, பதுளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 24-10-2024
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை இன்றைய தினம் மஹியங்கனை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.