• முகப்பு
  • புதுச்சேரி
  • செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்தபடி கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே இருந்த தமிழிசை.

செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்தபடி கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே இருந்த தமிழிசை.

சக்திவேல்

UPDATED: Mar 19, 2024, 11:49:56 AM

தமிழிசை சௌந்தர்ராஜன் தனது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இன்று மீண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வந்தடைந்தார்.

Also Read : யானைக்கு மதம் பிடிப்பது போல்  திமுகவுக்கு வெறி பிடித்து உள்ளது - அண்ணாமலை

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர்....

புதுச்சேரி மக்கள் என் மீது அளவுக் கடந்த அன்பு வைத்திருந்தார்கள் அந்த அன்பு தொடரும் முடிந்து விடாது. புதுச்சேரியில் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு எந்தெந்த வகையில் புதுச்சேரி மக்களுக்கு நல்ல திட்டங்கள் அளிக்கப்படனுமோ அத்தனையும் மனசாட்சியோடு அனுமதி அளித்திருக்கிறேன் என்றார்.

Also Read : திருப்பூர் பல்லடம் கள்ளக் கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை கொலையாளியை சுட்டு பிடித்தனர்

புதுச்சேரியில் மூன்று மாதம் இருக்க வேண்டும் என்று தான் அனுப்பினார்கள், ஆனால் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறேன் அது மட்டும் இல்லாமல் வீதிகளில் செல்லும் போது மக்கள் என் மீது அபரித அன்பாக நடந்து கொண்டார்கள் கோவிலுக்கு செல்லும்போது கூட அன்பை நான் மறக்கவே இல்லை புதுச்சேரியில் மிக மிக ஒரு புதுமையான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது இதற்காக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

புதுச்சேரியில் தமிழில் பதவி பிரமாணம் மட்டுமல்ல தமிழில் ஆளுநர் உரையாற்றியாற்றி

இருக்கிறேன் அதுவும் தனக்கு பெருமை தான் மகிழ்வான தருணம் தான் என்று தெரிவித்த தமிழிசை

புதுச்சேரியை விட்டு செல்வது தனக்கு மன வருத்தமாக தான் இருக்கிறது ஆனால் அதைவிட சேவை செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு செல்வதாக குறிப்பிட்டார்.

Also Read : உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்.

யார் சொல்லியும் எனது ராஜினாமா முடிவெடுக்கவில்லை 

ராஜினாமா என்பது நானே எடுத்த முடிவு தான் என்று திட்டவட்டமாக கூறிய தமிழிசை...

கவர்னர் மாளிகை என்பது மிகவும் வசதிமிக்க மாளிகை தெலுங்கானாவில் அழுத கொண்டே என்னை வழி அனுப்பினார்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுவிட்டு நான் பொது வாழ்க்கைக்கு வருகிறேன் என்றால் இந்த அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Also Watch : ரோட் ஷோ கோவையில் மக்கள் வெள்ளத்தில் மோடி

நாளை கட்சி அலுவலகத்திற்கு செல்கிறேன் அங்கு என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நான் ஏற்றுக் கொள்வேன் வெற்றிகரமான நிகழ்வாக தான் இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்த தமிழிசை மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று தான் செல்கிறேன் தமிழக மக்கள் மீது அன்பு உண்டு புதுவை மக்கள் என் மீது வைத்த அன்பு அபரிதமானது என்றார்.

Also Read : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தலைமறைவு.

புதுச்சேரிக்கு வருங்காலத்தில் யார் முதல்வராக இருந்தாலும் சரி வருங்காலத்தில் வரும் ஆளுநராக இருந்தாலும் சரி புதுச்சேரிக்கு எந்த திட்டங்கள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்குவன் என்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருப்பேன் என்றார்.

Also Read : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட இருவர் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு

மணக்குள விநாயகர் மீது அபரித நம்பிக்கை வைத்துள்ளேன் எதிரிகளை சர்வ சாதாரணமாக தூசி தட்டி விட்டு போவது தான் என்னுடைய பலம் இந்த பலம் தனக்கு கை கொடுக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்ட தமிழிசை

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் குடியரசுத் தலைவர் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Also Watch : திருச்சியில் திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார்

பிரதமர் மோடி மறுபடியும் பிரதமராக வரவேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் அப்படிப்பட்ட பிரதமர் இருப்பதால்தான் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது வேண்டும் மோடி மீண்டும் மோடி என்பதுதான் தனது தாரக மந்திரம் என்றார்.

  • 6

VIDEOS

Recommended