• முகப்பு
  • புதுச்சேரி
  • புதுச்சேரியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தேர்தல் நடத்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.

புதுச்சேரியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தேர்தல் நடத்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.

சக்திவேல்

UPDATED: Apr 22, 2024, 7:45:02 AM

புதுச்சேரியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று அரியாங்குப்பம் மற்றும் மனவெளி தொகுதி பாஜக பிரமுகர் விக்கி (எ) ராஜ கணபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது :

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மேலும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்த விதிமுறைகள் தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராஜ கணபதி

தேர்தல் நடைமுறை என்ற பெயரில் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதேகாலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களும் வணிகர்களும் தான் என்று தெரிவித்த அவர் 

மேலும் அவர்களை 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே,புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் எனவும் விக்கி என்கிற ராஜகணபதி கேட்டுக் கொண்டார்.

 

  • 11

VIDEOS

Recommended