• முகப்பு
  • அரசியல்
  • மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகனுக்கு கடந்த கூட்டத்தில் அல்வாவை கொடுத்த கவுன்சிலர் - மன்னிப்பு கேட்டார்.

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகனுக்கு கடந்த கூட்டத்தில் அல்வாவை கொடுத்த கவுன்சிலர் - மன்னிப்பு கேட்டார்.

JK

UPDATED: Sep 27, 2024, 12:56:07 PM

திருச்சி மாநகராட்சி

மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் மேயர் அன்பழகன் சென்ற மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பொற்கொடி மாமன்ற உறுப்பினர் செய்த செயல் வருந்தத்தக்க செயலாகும். இது போன்ற செயல் மாமன்றத்தில் முன் உதாரணமாகி விடக்கூடாது.

எனவே மாமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் காரணமாக மேயரும் கவுன்சிலரும் மாறி மாறி தங்களது கருத்துக்களை முன்வைக்க மாமன்ற கூட்டத்தில் சுமார் 15நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கவுன்சிலர் பொற்கொடி நான் வேறு எந்தவித நோக்கத்திலும் இனிப்பு வழங்கவில்லை இருந்தாலும் நான் அந்த செயலுக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார் இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

மேயர் அன்பழகன் - தற்பொழுது மழைக்காலம் நெருங்கி வருவதால் திருச்சி மாநகராட்சியில் 257 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 4 கோடியே 12 லட்சம் செலவில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதில் 57கிமீதூரத்திற்கு பணிகள் முடிவடைந்து உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 436 மாடுகள் பிடிக்கப்பட்டுஏலம் விடப்பட்டு ரூபாய் 16 லட்சத்து 56ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 24,000 நாய்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளது.

இதில் 179 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்று எந்த மாநகராட்சியிலும் சிறப்பாக செய்யவில்லை.

இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மதிவாணன் (திமுக): -நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெறும் உறுப்பினர்கள் தேர்தலை தீபாவளிக்கு பிறகு நடத்த வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.

இதே கருத்தை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த கவுன்சிலர்கள் சங்கர், சுரேஷ், திமுகவை சேர்ந்த ராமதாஸ், முத்து செல்வம் ஆகியோர் வலியுறுத்தி பேசினார்கள்.

ரெக்ஸ் (காங்) ஆகாய தாமரை அகற்ற கூடுதல் வாகனம் தேவைப்படுகிறது

மத்திய பேருந்து நிலையம், ரெயில் நிலையம் - கண்டோன்மென்ட் பகுதியில் அதிகபடியான ஆக்கிரமிப்பு பிரியாணி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையினை விரைவில் திறக்கவேண்டும்.

கணேஷ் நகர் நூலகத்திற்கு முகப்பு ஷெட், மேஜைகள் மற்றும் நாற்காலிகள் வேண்டும், பாரதிதாசன் 5 வது தெரு முதல் சேரன் நகர் வரை சுமார் 400 மீட்டர் தார் சாலை வேண்டும்

மேயர் அன்பழகன்: திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரியாணி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அவர்களுக்கு வேறு இடத்தில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சிவாஜி சிலையை திறப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்து திறக்க அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள்,உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

VIDEOS

Recommended