• முகப்பு
  • அரசியல்
  • அண்ணாமலைக்கு செருப்பு மாலையிட்ட காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு.

அண்ணாமலைக்கு செருப்பு மாலையிட்ட காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு.

சுந்தர்

UPDATED: Jul 11, 2024, 7:27:15 PM

அரசியல் நியூஸ் அப்டேட்ஸ் 

சென்னை வளசரவாக்கம அடுத்த காரம்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளாரும், செயற்குழு உறுப்பினருமான பாஸ்கர் உட்பட பலர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. 147 - கலகம் செய்தல், 188 - உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆர்பாட்டம்

முன்னதாக, நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து காரம்பாக்கம் எம்ஜிஆர் சிலை அருகே சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநில செயலாளர் பாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில், அண்ணாமலையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

குறிப்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீண்டும் கர்நாடகாவுக்கு ஓட வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

அண்ணாமலைக்கு செருப்பு மாலை

அப்போது அண்ணாமலையின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் ஆர்பாட்டம் செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended