தற்போதுள்ள பொருளாதார உயர்வுக்கு ஏற்ப தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் வேண்டும்
ராமு தனராஜா
UPDATED: Feb 19, 2024, 10:04:28 AM
பாட்டாளி மக்கள் என் தொப்புள் கொடி உறவுகள் சார்பாக என் மக்களுடன் இணைந்து இலங்கை திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதிக்கும், தொழில் அமைச்சருக்கும், தோட்ட கம்பனிகளுக்கும் ஒரு கௌரவமான வேண்டுகோளை விடுக்கின்றேன் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்.
Also Read.இலங்கை புலமை சொத்து கலாநிதி அசீசின் 50 வது நினைவு தின உரை
உழைப்புக்கேற்ற ஊதியம் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் 200 வருடம் 5 பரம்பரையாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்பட்டு கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்களின் தற்போது உள்ள பொருளாதாரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பெருந்தோட்ட கம்பனிகளும் மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். என்றும் மாறாக பெருந்தோட்ட கம்பனிகள் மனிதாபிமானமற்ற முறையிலோ தான்தோன்றி தனமாக செயற்படுவதற்கு நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல ஆகவே ஜனாதிபதி அவர்களும் தொழில் அமைச்சும் தொழிற்சங்களும் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சில காலம் அவகாசம் கம்பனிகளுக்கு கொடுக்கப்பட்டு இன்று 3 வருடமாகிவிட்டது. வாழ்க்கை செலவுக்கு ஏற்ற வகையிலேயே ஏனைய துறைகளுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளகள் காலம் காலமாக சம்பள உயர்வுக்காக எதிர்ப்பார்த்து கொண்டிருப்பதும் பல கசப்பான சம்பவங்களுக்கு பிறகே சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது.
ஆகவே நாங்கள் அதிமேதகு ஜனாதிபதியிடம் கேட்டு கொள்வது கம்பனிகளுக்கு உத்தரவிட்டு உடனடியாக காலத்துக்கு ஏற்ப சம்பள உயர்வை பெற்று தாருங்கள் என ஜனாதிபதியும் மீண்டும் கோரிக்கை விடுத்தார் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்.
Also Read .பாதிக்கப்பட்ட மக்களின் அவல குரல் உதவுபவர்களே இது உங்களின்
மடுல்சீமை பகுதியில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய காரியாலயைத்தை திறந்து வைத்து மக்கள் முன் உருயாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த காலங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் போது பசறை, மீதும்பிபிட்டி,லுணுகலை பழைய தொழில் சாலை பிரிவு மக்கள், மடுல்சீமை டூமோ மக்கள், அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவதும் அரசியல்வாதிகள் அவ்விடத்திற்கு சென்று வாக்குறுதிகள் வழங்கி செல்வதும் வழமையாகயிருந்தது.
ஆனால் இம்முறை நான் பிரதேச செயலகம் செயலாளர் , அனர்த்த முகாமைத்துவ அதிகாரி பெருந்தோட்ட அதிகாரிகளிடம்
பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். அதன் பிரகாரம் மண் பரிசோதனை அதிகாரிகள் அறிக்கை எமக்கு தேவைப்பட்டது. அந்த அறிக்கையின் மூலமாக ஹொப்டன் பழைய தொழிற்சாலை பிரிவில் உள்ள 145 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்க ஹொப்டன் இலக்கம் 1 என்ற காணியும், அதே போல் பசறை மீதும் பிடி சிறி கணேசா பாடசாலைக்கு அருகில் இருக்கின்ற காணியில் மீதும் பிடிய A பிரிவில் இருக்கின்ற 78 குடும்பங்களுக்கு அக்காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மீதும்பிபிட்டி 96 C என்ற பிரிவில் இருக்கின்ற மக்களுக்கு மீதும்பிபிட்டி B பிரிவில் இலக்கம் 3 காணியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இடங்களில் வீடுகள் நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.