இலங்கை புலமை சொத்து கலாநிதி அசீசின் 50 வது நினைவு தின உரை
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Feb 19, 2024, 1:42:12 AM
கலாநிதி ஏ. எம். ஏ. அசீஸ் , கல்வியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், சமூக சேவையாளரும் செனட்டரும் கொழும்பு சாஹிரா கல்லுாாியின் முன்னாள் அதிபருமான் கலாநிதி அசீசின் 50 வது நினைவு தினப்போச்சு கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கபுர் மண்டபத்தில் அசிஸ் மன்றத்தின் தலைவர் காலித் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலாநிதி அஸீஸ் பற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்ட கல்வியலாளர் பேராசிரியர் எம்.செர்னராஜா பிரதான உரையாற்றினார்.
Also Read
வலம்புரி கவிதா வட்டத்தின் 97 வது நிகழ்வு
.அத்துடன் கேப்டன் பொறியியலாளர் ஏ.ஜி.ஏ பாரி சர்வதேச திட்டத்தின் ஆலோசகர், மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மற்றும் அரப் நியூஸ் ஆங்கில மொழி சிரேஸ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல் டீன் வை.எம்.எம். ஏ தலைவர் இஹ்சான் ஏ ஹமீட் வை.எம்.எம். முன்னாள் தலைவர் சஹிட் எம். றிஸ்மி ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.இந் நிகழ்வில் சிங்கள மொழி மூனலாமான சிங்கள முஸ்லிம் ஒற்றுமை பற்றிய நுாலை நுாலாசிரியர் தேசமான்ய எம்.டி.டி. பீறிஸ் அவர்கள் பேராசிரியர் செர்னராஜாவிடம் கையளித்தார் அத்துடன் அசீஸ் பற்றி பேராசிரியர் எம். ஏ நுஹ்மான் எழுதிய நுாலை செனட்டர் கலாநிதி அசீசின் மகன் முஹம்மது அலி அசீஸ் பிரதம பேச்சாளர் சொ்னரஜாவிடம் கையளித்தார்
இந் நிகழ்வில் கலாநிதி அசீஸ் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அசிஸ் அவர்களின் கல்வி கற்ற மாணவர்கள் அசீஸ் மன்ற உறுப்பினர்கள், வை.எம்.எம்.ஏ உறுப்பினர்கள் ஏ.எச்.எம். பௌசி, எகிப்து நாட்டின் இலங்கைக்கான துாதுவர், ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் அதிபர் றிஸ்னி மரிக்கார் உட்பட பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அசீஸ் பற்றி பேராசிரியா் சொ்னராஜா உரையாற்றுகையில்.
Also Read.இளகிய மனதுடாயோர் இதனை பார்க்காதீர்
கலாநிதி அசீஸ் ஒர் தமிழ் முஸ்லிம்களுக்கு தலைவராக செயல்பட்டவர். அவர் யாழ்ப்பாணம் பிற்ப்பிடமாகக் கொண்டவர் அவரது. தந்தை யாழ்ப்பாண நகர சபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.
1929 இல் இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார்.1933 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு தொடர்வதற்காக இங்கிலாந்து சென்றார்.
அசீஸ் அவர்களின் மகன் அலி அசீஸ் அவர்கள் நானும் கொழும்பு ரோயல் கல்லுாாியில் ஆரம்பப் பிரிவில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றோம். அசீஸ் அவர்காலத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென ஒர் பிரபல்யமான கல்லுாாி இருக்கையில் அவர் கொழும்பு சாஹிராக கல்லுாாியை பாரம் எடுத்து பாரிய கல்லுாரி புரட்சியை ஏற்படுத்தி முஸ்லிம் சமுகத்தில் பல கல்வியலாளர்களை உருவாக்கினார்.
அரபுத் தமிழ் போன்ற மொழிகளில் அவர் பாண்டியத்தியம் பெற்றார். கிழக்கு மாகாணாத்தல் விபுலாநாந்தர் அடிகாளரும் இணைந்து தமிழ் ,ஹிந்து இஸ்லாமிய தேசிய ஒற்றுமை மற்றும் பல்வேறு நிகழ்வுகளை அவர் ஏற்படுத்தினார்.
அசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராக பணியாற்றினார்.
Read Also.துறை சார்ந்தவர்கள் பாராட்டு சாமிமலையில்
1950 மற்றும் 1960களில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தவர். அவர் எழுதிய நூல்கள் இலங்கையில் இஸ்லாம், அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, மிஸ்ரின் வசியம். கிழக்காபிரிக்கக் காட்சிகள் ,ஆபிரிக்க அனுபவங்கள்தமிழ் யாத்திரை .ஆகிய நுால்களை எழுதியுள்ளார்.என பேராசிரியர் உரையாற்றினர்.