மாசி மாகா சிவராத்திரி ராமேஸ்வரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறப்பு
கார்மேகம்
UPDATED: Mar 7, 2024, 7:21:37 AM
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 01 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடை பெற்று வருகின்றது.
Also Read : ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.
இதனிடையே திருவிழாவின் 6 வது நாளான நேற்று காலை சாமி அம்பாள் தங்க கோடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று இரவு 8 மணிக்கு மேல் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார் திருவிழாவின் 8 வது நாள் நிகழ்ச்சியான நாளை ( வெள்ளிக்கிழமை ) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படும்
கோவில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை சாத்தப் படாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும் அது போல் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை காலை 9.00 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
Also Read : நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் கட்டாய கட்டண வசூலை தடுத்திட வேண்டும்.
இரவு 9.00 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது திருவிழாவின் 9 வது நாள் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் ( சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு சாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.