• முகப்பு
  • ஆன்மீகம்
  • கொழும்பு - மருதானை, கிளிப்டன் ஒழுங்கை "கட்டக்கல மரத்தடி" தைக்கா - ஸியாரத்தின் 61 ஆவது வருடாந்த கந்தூரி தமாம் வைபவம்

கொழும்பு - மருதானை, கிளிப்டன் ஒழுங்கை "கட்டக்கல மரத்தடி" தைக்கா - ஸியாரத்தின் 61 ஆவது வருடாந்த கந்தூரி தமாம் வைபவம்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Mar 4, 2024, 10:07:44 AM

கொழும்பு - மருதானை, கிளிப்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள கட்டக்கல மரத்தடி தைக்கா - ஸியாரத்தின் 61 ஆவது வருடாந்த கந்தூரி தமாம் வைபவ நிகழ்வுகள்,  வெகு சிறப்பாக இடம்பெற்றன.
இங்கு அடங்கப்பட்டிருக்கும் சங்கைக்குரிய அஷ் - ஷெய்கு, அஸ் - ஸெய்யிது இஸ்மாயில் கிந்தீல் வலியுல்லாஹ் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் 61 ஆவது நினைவாகவே இக்கந்தூரி தமாம் நிகழ்வுகள் நடைபெற்றன.

Also Read : அமெரிக்காவில் பல பகுதிகளில் நோரோ வைரஸ் என்ற புதிய நோய்

 கிளிப்டன் முஸ்லிம் இளைஞர் சங்கம் ஏற்பாட்டில் மற்றும் அதனுடன் இணந்ததான பலரது பங்களிப்புடன் இடம்பெற்ற இச்சிறப்பு தமாம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், மௌலவி எம். மபாஸ் மன்ஸூர் (நுழாரி) சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

 கட்டக்கல மரத்தடி தைக்கா  ஸியாரத்தின் பேஷ் இமாம்களான மௌலவி எம்.எஸ்.எம். இஸ்மாயில் (ஹியாஸி), அல் ஆலிம் அல் ஹாபிஃழ் ஏ.எச்.எம். ஸஜ்ஜாத் ஹுஸைன் (கௌஸி), மௌலவி ஐ. ஏ. காதிர் கான் (தீனி) மற்றும் கொழும்பு - மருதானை ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மௌலவி எம்.எம். அஹமத் ஷா ஜமாலி - பய்யாஸி (கலீபதுல் காதிரி - ஜிஷ்தி) உள்ளிட்ட உலமாப் பெருமக்கள் பலரும் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

Also Read : முந்தல் - புளிச்சா குளத்தில் ரயில் பாதையை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வழமைபோல் இம்முறையும், ஷஃபான் மாதம் பிறை ஒன்றுக்குச் சமமாகிய 2014 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை (அஸர் தொழுகையைத் தொடர்ந்து) மாலை 5.30 மணியளவில் கொடியேற்ற வைபவம் மற்றும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து "ஸுப்ஹான மௌலூத்" ஓதலுடன் ஆரம்பமாகி, கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை (பிறை பத்தில்) ஸுப்ஹான மௌலூத் ஒதலுடன் நிறைவு பெற்றன.

 மார்ச் மாதம் இரண்டாம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஸியாரத்வைபவ நிகழ்வுகள் இடம்பெற்றன.

Also Read : இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஸுப்ஹான மௌலூத் ஓதப்பட்டு, ழுஹர் தொழுகையின் பின், "யா - நபி" மற்றும் ஸியாரத் பைத்துடன், பெரிய துஆவும் ஓதப்பட்டு, இறுதியாக பகற் போஷணத்துடன், புனித மஜ்லிஸ் நிகழ்வுகள் நிறைவுற்றன.

 

 

VIDEOS

RELATED NEWS

Recommended