இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: Feb 25, 2024, 4:16:22 PM

மேமன் மனிதநேய சங்கம், காதர் ஹாஜியார் பவுண்டேசன் மற்றும் புல்செஸ் ஸ்புட்டிங் அன் புரோசசிங் இன்டஸ்ரீஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரியில் மேமன் சங்கத்தின் தலைவர் ஏ.எல். அன்வர் தலைமையில் இடம் பெற்றது.


காதர் ஹாஜியார் பவுண்டேசனின் தலைவர் கலாநிதி கமால்டீன் ஹாஜியாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக செகல்வத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த கலந்து கொண்டிருந்தார்.

Also Read.ஆற்றில் நீராடச் சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்பு

கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிப்பாவா பாறுக் மற்றும் பாடசாலை அதிபர் எம்.எம்.மஹ்ஸர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது அல்-ஹிக்மா பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட வாழைத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மூவின மக்களுக்கும்கலந்து கொண்டனர்.

Also Read.அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது கண்டனத்தை வெளியிட்டார்

இவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொண்டு கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended