• முகப்பு
  • இலங்கை
  • ஆற்றில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கௌசல்யா

UPDATED: Feb 25, 2024, 12:16:53 PM

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை நகருக்கு அருகில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆற்றில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார்
தெரிவித்தனர்.

Also Read.ஊடகவியலாளர்களின் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் தலவாக்கலை நகரில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரின் மகனான இனோக்கா ரேணுகா கமகே தலவாக்கலை சிங்கள பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்வி பயின்ற வந்த (வயது 15) சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்று (24.02.2024) பரிசு பெற்ற இந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Also Read.திடீர் தீ விபத்தால் வெளிவேரியன் கிராமத்தில் வீடு ஒன்று எரிந்தது

தனது நண்பர்களில் ஒருவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பதனால் அதை கொண்டாடும் வகையில் ஐவரடங்கிய நண்பர்கள் ஆற்றில் நீராடிவிட்டு அங்கு உணவு உண்ணவும் தயாராகியிறுந்துள்ளனர்.

இந்த நிலையில் நீராட சென்ற இந்த நண்பர்களில் ஒருவரான இனோக்கா ரேணுகா கமகே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை கேள்வியுற்று ஆற்றுக்கு ஒடியவர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாகவே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read.மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை சீமந்து பைகள் கையளிப்பு

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞரின் உடல் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதணைக்கு சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended