• முகப்பு
  • இலங்கை
  • இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய இமாலயாப் பிரகடனம் தொடர்பான விழிப்புணர்வு

இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய இமாலயாப் பிரகடனம் தொடர்பான விழிப்புணர்வு

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Feb 18, 2024, 4:19:33 AM

இமாலாயாப் பிரகடனத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட விடயங்களைப் பற்றி ய இரண்டாவது தேசிய கலந்துரையாடல் கண்டி ‘ரிவர்சைட் ஹோட்டலில்’ இடம் பெற்றது.
இலங்கையின் தேசிய இனம் பிரச்சினை தொடர்பாக விடயங்களை எவ்வாறு தீர்பது என்பது பற்றியே இமாலயாப் பிரகடனம் தெரிவிக்கிறது.

Also Read.நன்கு ஆராய்ந்த பின்னரே வாக்களிக்க வேண்டும் 

சில மாதங்களுக்கு முன் பௌத்த மத தலைவர்கள் மற்றும்விநாடுகளில் வாழ்கின்ற இலஙகை பிஜைகளின் அமைப்புக்களும் (டயஸ்போராக்கள்) இணைந்து மேற்படி இமாலயாப்பிரகடனம் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வைத்து வெளியிடப்பட்டது.

அதன் பின் மகா நாயக்கத்தேர்ர்கள் அரசியல் வாதிகள்போன்ற பலரை அது பற்றி தெளிவு படுத்தல் நிகழ்வுகள் பல இடம் பெற்றன. தற்போது மாவட்ட ரீதியில் சமயத் தலைவர்களை தெளிவு படுத்தும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

அதன் ஒரு அங்கமதக கடந்த வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கண்டி ரிவடேல் ஹோட்டலில் மாவட்ட ரீதியில் சமயத் தலைவர்களுக்கு ஒரு செயலமர்வு இடம் பெற்றது.

Also Read.பெனடிக் வெஸ்லி கிரிக்கெட் போட்டி 

இதில் மாத்தனை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended