நன்கு ஆராய்ந்தே வாக்களிப்போம் கண்டியில் மக்கள் இயக்கம்
கண்டி - ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Feb 18, 2024, 3:43:02 AM
தேர்தல்களின் போது எவ்வாறு அபேட்சகர்களைத் தெரிவு செய்வது என்பது தொடர்பான பிரமாணங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும் ‘மஞ்சற் கயிறு இயக்கம்’ கண்டியில் பிரசாரங்களை மேற்கொண்டது. (17ம் திதகதி சனிக்கிழமை)
கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் இது இடம் பெற்றது. கண்டயில் இயங்கும் சர்வமத அமைப்பு, கண்டி சிவில் அமைப்புக்களின் ஒன்றியம், கண்டி பிரஜைகள் அமைப்பு, சர்வோதய அமைப்பு என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
Also Read.இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்
தற்காலிக அல்லது குறுகிய கால நுகர்விற்கு பொருட்களை வாங்கும் போது அதனை நன்கு பரிசீலித்தே தெரிவு செய்கிறோம்.
ஆனால் நீண்டகாலத் தேவை மற்றும் எதிர்காலச் சந்ததிக்கான அடுத்த கட்ட நடவடிக்கை போன்றவற்றைத் தீர் மானிக்கும் 'வாக்களிப்பு' என்ற விடயத்தோடு மட்டும் சிலர் குறுகிய சலுகைகளை மட்டும் கவனத்திற் கொள்கின்றனர்.
இது தவிர்கப்பட வேண்டும் என்பதே மேற்படி இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.
ஒரு வேளை சமயலுக்கு ஒரு தேங்காயைத் தெரிவு செய்ய அதனை எத்தனை முறை ஆட்டி அசைத்து தட்டிப் பார்க்கிறோம். ஆனால் வாக்களிப்பின் போது அது போன்று எதனையும் அலசி ஆராய்வதில்லை. என்பதை விளக்கும் பல்வேறு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
Also Read.எமது இந்திய youtube சேனல் நீங்களும் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்
மேற்படி பிரசார யுக்திகளில் ஒன்றாக இனிமேல் நாம் 'நன்கு அலசி ஆராந்தே வாக்களிப்போம்' என்பதை உணர்த்தும் வகையில் கையில் மஞ்சட் கயிறுகளை கட்டி வாழ்த்தி வழி அனுப்பினர்.