மலையக வரிய மக்களுக்கு இவ்வாரான உதவிகள் தேவை
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Feb 17, 2024, 2:02:43 PM
சிவசேனா அமைப்பிற்கும் அது போன்று டிஎஸ்டி அறக்கட்டளை அமைப்புக்கும் என்னுடைய அடி மனதில் இருந்து வருகின்ற பாராட்டினை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரைய 3000 மாணவர்களுக்கு அப்பியாசக் கோப்பைகளை வழங்குவதற்கு முன் வந்திருக்கும் டி எஸ் டி அறக்கட்டளை நிறுவனத்தின் முகமைத்துவ பணிப்பாளர் சசிகுமார் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள குரல் ஒலி யிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
Also Read :ஓன்லைன் ஊடக பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் விளக்கம்
அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது :-
இவ்வாறான செயல்பாடு உண்மையிலேயே சமயத்தை மற்றும் வளர்ப்பது நோக்கமல்ல அது ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.
அதே நேரத்தில் உங்களுக்கு தெரியும் மலையகம் என்றால் அதாவது மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் மிகவும் அதிகமாக வாழுகின்ற ஒரு பிரதேசமாகும்.
Also Read :நிலா வெளி கடற்கரை சிரமதான பணி மூலம் துப்பரவு
மலையகத்தில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றவர்கள் லட்சக்கணக்கில் வாழுகிறார்கள். மிகவும் நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்கள் இப்பிரதேசத்தில் அதிகமாக வாழ்கிறார்கள்.
அவர்களின் பிள்ளைகளுக்கும் நீங்கள் இவ்வாறு உதவ முடியும் என்றால் அது பெரும் உதவியாக இருக்கும் மாத்திரமல்ல இது ஒரு தர்மம் என்றும் நான் சொல்லுவேன்.
Also Read :பாடசாலை ஊடக கழகம் ஆரம்பம்
இந்த விடயத்தில் நீங்களும் கவனம் செலுத்தினால் உங்களது கடைக்கண் பார்வை விழுந்தால் மிக மிக உதவியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து .