• முகப்பு
  • இலங்கை
  • ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத திருத்தப்பட்ட தடைச்சட்டம் என்பன தொடர்பில் துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்

ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத திருத்தப்பட்ட தடைச்சட்டம் என்பன தொடர்பில் துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 17, 2024, 9:20:54 AM

தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத திருத்தப்பட்ட தடைச்சட்டம் என்பன தொடர்பில் துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடலொன்றினை சமூக நீதிக்கான கட்சினர் வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.சமூக நீதிக்கான கட்சியின் தலைவர் நஜா முஹம்மத் தலைமையில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் புதிய ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் எந்தளவுக்கு மக்களை அடக்கப் போகின்றது என்பது தொடர்பிலும் தகவல் அறிவதை கட்டுப்டுத்தப் போகின்றது என்பதையும் கடந்த கால செயற்பாடுகளை ஒப்பிட்டு விளக்கமளித்தார் சமூக செயற்பாட்டாளரும்,சட்டத்தரணியுமான ஏர்மிசா தேகல்.

Also Read :இலங்கையில் 3,000 மாணவ, மாணவிகளுக்கு வழங்க இருக்கும் நோட்புக்

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தி அரசியல் நலனுக்காக முயலும் அரசின் நகர்வுகளுக்கான புதிய வடிவமாக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இளம் ஊடக ஒன்றியத்தின் தலைவர் தரின்ந்து ஜயவர்தன தமது விளக்கத்தில் குறிப்பிட்டதுடன்,இதனை மாற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளை அவர் எடுத்துரைத்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஷரத்துக்களின் பார்வை இவ்வாறு இடத்திற்கு ஏற்ப மாறுகின்றது என்பது தொடர்பில் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் விளக்கமளித்தார்.

Also Read :பெனடிக் - வெஸ்லி பிரமாண்டாமான கிரிக்கெட் 

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணியும்,தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு அங்கத்தவருமான உபுல் குமாரப்பெரும பேசுகையில்-பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆஜராகின்ற போது இனசாயம் பூசுகின்ற நிலையே காணப்படுகின்றது.கடும் போக்கு அரசாங்கத்தின் இவ்வாறான சட்டங்கள் நாட்டிற்கு விடிவாக அமையாது.இந்த எதேச்சதிகார தனத்தினை மாற்றுவதற்கான சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் பலமானதாக இருக்கின்ற போது மக்கள் அடக்கப்படுவர்,ஆனால் அரசு பலமிழக்கின்ற போதே மக்களின் எழுச்சி முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியதுடன்,பயங்கரவாத தடைச்சட்டம்,ஊடக அடக்கு முறைச் சட்டம் என்பன மக்களினால் நிராகரிக்கபடல் வேண்டும் என்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended