3 புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து தெரிவிக்க மறுப்பு
கார்மேகம்
UPDATED: Jul 5, 2024, 4:06:41 AM
3 புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து தெரிவிக்க மறுப்பு
3 புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்
( கோர்ட்டுக்கு அடிக்கல் )
ஆங்கிலேயர் கால குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1- ந் தேதி அமலுக்கு வந்தன
அவற்றுக்கு எதிராக பல மாநிலங்களில் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் சில எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
இந்நிலையில் டெல்லியில் 3 புதிய விசாரணை கோர்ட்டு கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது அதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்
அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர் அதில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கேட்டனர் :
அதற்கு தலைமை நீதிபதி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்
அவர் கூறியதாவது :
3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன சில ஐ கோர்ட்டுகளிலும் வழக்குகள் இருக்கலாம்
ஆகவே கோர்ட்டில் உள்ள எந்த விஷயம் குறித்தும் நான் பேசக்கூடாது இவ்வாறு அவர் கூறினார்
( அரசியல் சாசனத்துக்கு துணை)
முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை நீதிபதி பேசியதாவது அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கோர்ட்டுகள் துணையாக இருக்க வேண்டும் மனுதாரர்களை தவிர வேறு யாருக்கும் சேவை செய்யக்கூடாது
கோர்ட்டுகள் செங்கள் கான்கிரீட்டால் மட்டும் கட்டப்படவில்லை நம்பிக்கையால் கட்டப்பட்டுள்ளன
கோர்ட்டில் ஒவ்வொரு வழக்கும் அந்த நம்பிக்கையுடன் தான் தாக்கல் செய்யப் படுகின்றன இவ்வாறு அவர் பேசினார்.