நள்ளிரவு கரையை கடந்த ரீமால் புயல்.
Bala
UPDATED: May 27, 2024, 10:53:59 AM
Cyclone Remal
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையையொட்டிய சாகர் தீவுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்த ரீமால் புயல்.
நேற்று இரவு 10.30 முதல் 12.30 மணிவரை தீவிர புயலாக கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 - 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் வீசிய சூறைக்காற்று வீசியது.
ரீமால் புயலினால் மேற்குவங்கத்தின் சாகர் சாகர் தீவில் பலத்த சேதம் அடைந்துள்ளது.
சேதமடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தீவிரப்படுத்திய தேசிய பேரிடர் மீட்புப்படையினர்.
வடக்கு வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் கரையை கடந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.