• முகப்பு
  • விவசாயம்
  • விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு என்எல்சி சுரங்கத்தின் அருகில் திரண்டதால் பரபரப்பு

விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு என்எல்சி சுரங்கத்தின் அருகில் திரண்டதால் பரபரப்பு

சண்முகம்

UPDATED: Jul 26, 2024, 8:31:43 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு என்எல்சி சுரங்கத்தின் அருகில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது சாகுபடி செய்துள்ள குறுவை நடவு பயிர் இன்னும் இரண்டு வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர்

அதனால் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு இப்பகுதிகளில் 2000 ஏக்கருக்கு மேல் பயிர் செய்து வரும் விவசாயிகள் இரண்டாவது சுரங்கத்தின் அருகில் திரண்டனர். 

நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் பின்னர் கலைந்து சென்றனர்.

இது குறித்து தெரிவிக்கும் அவர்கள் என்எல்சி நிர்வாகம் தற்போது தந்து வரும் தண்ணீரை இரவு நேரங்களில் திடீர் திடீரென நிறுத்தி விடுவதால் முற்றிலும் தண்ணீர் பாசனத்திற்கு இல்லாமல் தடைபட்டு போகிறது.

என்எல்சி

இப்போது நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள வயல்கள் வெடிப்பு ஏற்பட்டு வருகின்றன. தங்களை பல விதங்களில் வஞ்சிக்கும் இந்த என்எல்சி நிர்வாகம் தடையில்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் தந்து வர வேண்டும். 

ஏனெனில் தங்களுடைய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக என்எல்சி நிர்வாகம் தரும் தண்ணீரை நம்பி தான் உள்ளோம் என அவர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

Latest District News in Tamil 

தங்களை இனி மேலும் வஞ்சிக்காமல் உடனடியாக பாசன தண்ணீர் தர வேண்டும் என அவர்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை எனவும் அவர்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

 

VIDEOS

Recommended