• முகப்பு
  • கல்வி
  • கபுகஸ்தலாவ அல் மின்காஜ் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

கபுகஸ்தலாவ அல் மின்காஜ் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

UPDATED: Aug 12, 2024, 10:27:54 AM

கபுகஸ்தலாவ அல் மின்காஜ் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கான காரணம் பாடசாலை கல்வி நிலை மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் எதுவித பெளதீக வளங்களும் இல்லாத நிலையில் தேசிய பாடசாலை என்ற பெயரில் இயங்கி வருகின்றது. கல்வி நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் 30 வீதமான மாணவர்கள் பாடசாலை செல்வதை நிறுத்தியுள்ளனர்.

இப்பிரதேசத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையின் கல்வி நடவடிக்கையை உயர்துவதற்கு முன்வராத அதிபர் எமக்குத் தேவையில்லையென மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கம், கல்வி அபிவிருத்தி சங்கம் என சகல தரப்பினரும் முன்வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயம் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையிட்டு பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளர், பொறுப்பான மாகாண கல்வி அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து இது சம்பந்தமான கலந்துரையாடலுக்கு வருமாரு பழைய மாணவர் சங்கம், கல்வி அபிவிருத்தி குழு பிரதிநிதிகள் பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சுக்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

 

 

VIDEOS

Recommended