1000 பாடசாலைகளிள் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான டிஜிட்டல் மயப்படுத்தும் முதல் திட்டம் அறிமுகம்
இர்சாத் றஹ்மத்துல்லா
UPDATED: Sep 12, 2024, 5:51:16 PM
நாடளாவிய ரீதியில் 1000 பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தி பாடசாலை முகாமைத்துவ நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆய்ஷா ஹபீப் மன்றம் ஆரம்பித்துள்ளது. பேர்பெக்ட் சொப்ட் வெயார் டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந் நடவடிக்கைகள் இன்று (12) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த 1000 பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 25 முஸ்லிம் பாடசாலைகளின் முகாமைத்துவ நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
டிஜி விசன் ஸ்கூல் மெனேஜ்மென்ட் எனும் குறித்த மென் பொருளை பதிவேற்றிய பின்னர் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இலவச தொழில் நுட்ப ரீதியிலான உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக பேர்பெக்ட் சொப்ட் வெயார் டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரும் திட்ட பொறுப்பதிகாரியுமான ஜே.எல். சரூக்கின் ஆலோசனைக்கு அமைய திட்டம் வகுக்கப்பட்டு தேவையான தொழில் நுட்ப உதவிகளை முன்னெடுக்க பொறுப்பானவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஆய்ஷா ஹபீப் மன்றத்தின் திட்ட பொறுப்பதிகாரி சிஹானா சலீம் இன்றைய நிகழ்வில் குறிப்பிட்டார்.
அதன் படி இன்று 1000 பாடசாலை முகாமைத்துவ நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் கொழும்பு பிரிவு தொடர்பிலான பணிகள் கொழும்பு கிரான்ட் ஒரியன்டல் ஹோட்டலில் நடை பெற்றது.
ஆய்ஷா ஹபீப் மன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 20 அரச பாடசாலைகளுக்கும், மற்றும் 5 சர்வதேச பாடசாலைகளுக்கு பாடசாலை முகாமை நடவடிக்கைகளுக்கான இலவச மென் பொருள் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
இதனை விட இந்த 1000 பாடசாலைகளை டிஜிட்டல் மயபப்டுத்தும் திட்டத்தில் அவசியம் ஏற்படும் பாடசாலைகளை இனம் கண்டு மென் பொருளுக்கு மேலதிகமாக கணினிகளையும் வழங்க திட்டமிடப்பட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்ஷா ஹபீப் மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி அக்ரம் வஸீம் குறிப்பிட்டார்.
இன்றைய இந்த நிகழ்வில் ஆய்ஷா ஹபீப் மன்ற தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பேர்பெக்ட் சொப்ட் வெயார் டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரும் திட்ட பொறுப்பதிகாரியுமான ஜே.எல். சரூக்,நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் எம்.ஜே.எம். மன்சூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதே நேரம் 25 பாடசாலைகலினதும் அதிபர்கள் மற்றும் கணினி பிரிவுக்கு பொறுப்பானவர்களும் இதில் பங்கேற்றனர். இந்த மென ;பொருள் இன்றைய தினமே அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுவதுடன் அதனை செயற்படுத்தும் முறைமை தொடர்பிலும் ஒவ்வொரு பாடசாலைகள் சார்பிலும் கலந்துகொண்டோருக்கு விளக்கப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.