• முகப்பு
  • கல்வி
  • BWIO- USA சர்வதேச விருது விழா - 2023ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

BWIO- USA சர்வதேச விருது விழா - 2023ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

Irshad Rahumathulla

UPDATED: May 22, 2024, 5:53:04 PM

2023 ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமான அமேசன் கல்வி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழாவில் இந்த விருது அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE & AMAZON CAMPUS) நிறுவனத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

original/img-20240522-wa0211
வர்த்தக துறையில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து நுகர்வோருக்கு சிறந்த சேவையாற்றிய நிறுவனங்களை கெளரவிக்கும் முகமாக Business World International Organization, USA (BWIO) நிறுவனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு விருதுகள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இந்த நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது 

நிறுவனத்துக்கான விருதினை அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE & AMAZON CAMPUS) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் பெற்றுக்கொண்டார்.

original/img-20240522-wa0215
விருதினை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,  

அயராத முயட்சியும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக எமது நிறுவனம் வழங்கி வந்த தரமான சேவையே​ எம்மை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. 

இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 

VIDEOS

Recommended