- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஜீரோ விபத்து திட்டம் செண்டை மேளத்துடன் விழிப்புணர்வு மதுரவாயல் போக்குவரத்து போலீசார் நூதன முயற்சி
ஜீரோ விபத்து திட்டம் செண்டை மேளத்துடன் விழிப்புணர்வு மதுரவாயல் போக்குவரத்து போலீசார் நூதன முயற்சி
சுந்தர்
UPDATED: Aug 19, 2024, 7:34:47 AM
சென்னை
முழுவதும் ஹீரோ விபத்து திட்டம் என்ற பெயரில் விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த திட்டத்தினை மேலும் மக்களிடம் விழிப்புணர்வு செய்ய சென்னை போக்குவரத்து காவல் ஆணையரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல், ஏரிக்கரை சிக்னலில் போக்குவரத்து போலீசார் இன்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
Latest Chennai District News
அதன்படி போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆய்வாளர் ரமணகாந்தி ஒருங்கிணைப்பு செய்தார்.
அப்போது வாகன ஓட்டிகளின் கவனத்தை செண்டை மேளம் வாசிப்பின் மூலம் ஈர்த்து அவர்களுக்கு ஜீரோ விபத்து குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Breaking News
மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் எனவும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவும், பயணத்தின் போது மதுவை தவிர்ப்பது உள்ளிட்ட அறிவுரைகள் பதாகைகள் மூலம் ஏந்தி வழங்கப்பட்டன.
வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை தினமும் இதுபோன்ற விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.