சோளிங்கர் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் நடவடிக்கை எடுக்குமா மின்சார வாரியம் ?

பரணி

UPDATED: Jun 26, 2024, 6:16:33 PM

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தலங்கை பகுதி யில் நூற்றுக்கணக்-கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன இதில் நெல், கரும்பு, பருத்தி, வேர்க டலை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் இணைக்கும் வகை-யில் அமைக்கப்பட்ட மின்கம் பங்கள் முழுவதுமாக சேத மடைந்து கீழே விழும் அபாயகரமான நிலையில் காட்சியளித்து வருகிறது.

விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு தங்களது கால்நடைகள் ஓட்டிச்செல்லும்போது அச்சத்து டன் சென்று வருகின்றனர். 

மழை காலம் என்பதால் காற்று வேகமாக வீசும் போது இதுபோன்று பழுத டைந்து காணப்படுகின்ற மின் கம்பங்கள் விழுந்து எதிர்பாராத விபத்தினால் மனித மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு நடக்கின்றது.

எனவே மின்சாரவாரிய அதிகாரி கள் உடனடியாக அப்புறப் ப-டுத்தி புதிய மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகளை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended