• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதான வளைவுப்பாலம் எப்போது புதிதாக அமைக்கப்படும்? 

சேத்தியாத்தோப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதான வளைவுப்பாலம் எப்போது புதிதாக அமைக்கப்படும்? 

சண்முகம்

UPDATED: Jun 24, 2024, 6:33:29 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் குமாரகுடி பகுதியில் உள்ள வலைவுப்பாலம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பாலமாக இருந்து வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்ற பாலம் வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், பல்வேறு வாகன போக்குவரத்திற்கும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பாலம் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வருவதால் வலு விழுந்து, பழுதாகி உள்ளது. அதனால் பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த வளைவுபாலத்தை மாற்றி புதிய பாலம் அமைத்தால் மட்டுமே இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் இயல்பாக பாலத்தை கடக்க முடியும் எனவும், இல்லை என்றால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாலம் உடைந்து விழுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த பாலத்தின் சுவற்றின் மேல் பல வாகனங்கள் மோதி பாலத்தின் கற்கள் பெயர்ந்தும், வாகனங்களின் கண்ணாடித் துண்டுகள் சிதறியும் கிடக்கின்றன.

அது மட்டுமல்லாமல் பல வாகனங்கள் கீழே உள்ள வாய்க்காலில் பாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டும் உள்ளன.

அவ்வப்போது வந்து செல்லும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் வேடிக்கை பார்த்து போட்டோ எடுத்து செல்வதோடு தங்களது கடமை முடிந்து விட்டது என நினைக்கின்றனர்.

தற்போது பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் சிக்னல் விளக்கு வைத்து மட்டும் சென்றுள்ளனர். ஆனால் இப்பகுதி வாகன ஓட்டிகள் கிராம மக்களின் கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் இருப்பது வலிக்கிறது என தெரிவிக்கும் இப்பகுதி மக்கள்,

வாகன ஓட்டிகளும் போர்க்கால அடிப்படையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்த சேதமான வளைவு பலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய உயர்மட்ட பாலம் அமைத்து தந்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் இப்பகுதி கிராம மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended