• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போது சட்டங்கள் ஒவ்வொன்று வருகிறது திருப்தி இல்லாமல் போகிறது - திருச்சியில் ஓய்வு பெற்ற நீதிஅரசர் கே.சந்துரு பேட்டி

ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போது சட்டங்கள் ஒவ்வொன்று வருகிறது திருப்தி இல்லாமல் போகிறது - திருச்சியில் ஓய்வு பெற்ற நீதிஅரசர் கே.சந்துரு பேட்டி

JK

UPDATED: Aug 24, 2024, 6:45:55 PM

திருச்சி 

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமையில் நடைபெற்றது.

சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்  தலைப்பில் நடக்கும் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 33 இளம் ஓவியர்கள்  பங்கேற்பில் 133 ஓவியங்கள் இடம்பெற்றன.

முதன்மை விருந்தினர் மேனாள் நீதி அரசர் சந்துரு கண்காட்சியினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட 3வது கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, ஓவியர் மனோகர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

ஒவிய கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் என பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் காட்சிப்படுத்திருந்தனர்.

நிகழ்வில் முதல்வர் நஸ்ரத் பேகம், பொற்கொடி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு பாலியல் சீண்டல்கள தொடர்க்கதையாக நடந்து வருகிறது.

பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சனை வெகு நாட்களாக உள்ளது. அரசாங்கம் பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தினாலும் அது எதிர்பார்த்த பாதுகாப்பு வழங்க முடியவில்லை.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்துள்ளது. இந்த சட்டங்கள் எல்லாம் தாண்டி வேறு என்ன செய்ய முடியும் என யோசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு சம்பவம் நடக்கும் பொழுது ஒவ்வொரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது ஆனால் அந்த சட்டங்கள் எப்படி நிறைவேறுகிறது என்று நாம் பார்த்தால் போதுமான திருப்தி இல்லாமல் போகிறது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவானது 15 நாட்களுக்குள் அறிக்கை தர உள்ளது. அது தொடர்பாக புதிய சட்டம் அறிவிக்கப்படும் என நினைக்கிறேன். அது வந்த பின்பு தான் அதனுடைய நடைமுறைகள் எப்படி இருக்கும் என தெரியும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு அறிக்கை வழங்கியது தொடர்பான கேள்விக்கு ?

நான் வழங்கியது அரசாங்கத்திற்கான ஆலோசனை மட்டும் தான். அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம் நோ கமெண்ட் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended