• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • எங்களுக்கு வீடு இல்லை, எங்களுக்கு வீடு இல்லை ,நாங்க செத்துப் போறோம் என மனு வாங்கும் கூடத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி.

எங்களுக்கு வீடு இல்லை, எங்களுக்கு வீடு இல்லை ,நாங்க செத்துப் போறோம் என மனு வாங்கும் கூடத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 22, 2024, 10:20:51 AM

காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது .

இவர்கள் அங்கு குடியிருந்து வந்த நிலையில் சிறுணை பெருகல் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் வெங்கடேசன், பெருமாள், அன்னக்கிளி ஆகியோர் கடந்த 14.07.2024 அன்று இரவு புல்டேஷ்ஷர் வைத்து இடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இவர்களுடைய வீட்டை இடித்து தள்ளிவிட்டு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் வீடு இன்றி தவித்த இந்த பெண்மணிகள் தெருவில் படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மனுநீதி நாள் முகாம் ஒட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்துக்கு வந்தனர்.

பின்னர் திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் எதிரே தரையில் அமர்ந்து கொண்டு நாங்கள் செத்துப் போறோம், நாங்கள் செத்துப் போறோம், எங்களுக்கு வீடு இல்லை, எங்களுக்கு வீடு இல்லை என கூக் குரல் இட்டவாறு தரையில் படுத்து உருண்டனர்.

இதனால் மக்கள் குறைதீர் முகாமில் அதிர்ச்சியும் ,பரபரப்பும் ஏற்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் எழுந்து வந்து அவர்களிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுதும் அவர்கள் சமாதானமடையாமல் சத்தமிட்டவாறே இருந்தனர்.

பின்னர் காவலர்கள் விரைந்து வந்து அவர்கள் வைத்திருக்கும் பையில் ஏதாவது மண்ணெண்ணெய் பெட்ரோல் போன்ற ஏதாவது அசம்பாவிதம் செய்யும் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என சோதனை இட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் கூட்டரங்கில் இருந்து இழுத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended