• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட் மையத்தில் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட் மையத்தில் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 2, 2024, 6:16:32 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மென்ட் மையம் செயல்பட்டு வருகின்றது. 

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளும், தேசிய அளவில் கர்நாடகா , ஆந்திரா, கேரளா, கல்கத்தா, ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளும் இங்குள்ள விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றார்கள். விடுதியில் தங்கி உள்ள மாணவ மாணவிகளுக்கு ராஜீவ் கந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட் மையத்திலேயே உயர்தர கேன்டீன் வசதிகள் உள்ளது.

பட்டப்படிப்பும் மேல் பட்டப்படிப்பும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருவதால் அவர்களுக்கு உண்டான அந்தந்த மாநில உணவுகளும் பொதுவான உணவுகளும் அளிப்பது வாடிக்கை.  

இந்நிலையில் நேற்று இரவு சப்பாத்தியும், இன்று காலை டிபன் வகைகளும், மதியம் உணவு அருந்தியுள்ளனர். நேற்று இரவில் இருந்தே பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாணவ மாணவிகளில் சுமார் 38 க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல் கோளாறு ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த நிர்வாகம் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட மாணவ மாணவிகளை மீட்டு 30க்கும் மேற்பட்டவர்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் மீதம் உள்ளவர்களை தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பிரபலமான இந்த மையத்தில் மாணவ மாணவிகளுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் மிகுந்த பாப்பாக்கும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

கடைசியாக கிடைத்த தகவல் படி வளாகத்தின் உள்ளே உள்ள குடித்தண்ணீரும் உடல்நல கோளாறுக்கு முக்கிய காரணமென கூறப்படுகிறது. 

இது தொடர்பாக மத்திய உளவுத் துறையினரும், ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.

 

VIDEOS

Recommended