- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அதியமான் கோட்டை அருகே டாஸ்மாக் திறப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
அதியமான் கோட்டை அருகே டாஸ்மாக் திறப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
சசி குமார்
UPDATED: Sep 19, 2024, 6:14:00 PM
தர்மபுரி மாவட்டம்
அதியமான் கோட்டை அடுத்து எட்டிமரத்துபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தின் அரசு மதுபான கடை புதியதாக திறக்கப்பட உள்ளதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் எட்டிமரத்துபட்டி 4ரோடு பகுதியில் நேற்று இரவு ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து எங்கள் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய தீர்வு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அதனால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டமானது 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு