• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விக்கிரவாண்டி தேர்தலில் தனது வேட்புமனு தள்ளுபடி செய்ததால் திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு.

விக்கிரவாண்டி தேர்தலில் தனது வேட்புமனு தள்ளுபடி செய்ததால் திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு.

JK

UPDATED: Jun 26, 2024, 6:55:19 AM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2021ல், ஏப்ரல் 6, சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து அவரது மரணத்துக்கு அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டியிடுகின்றனர். 

ஜூலை 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கான மனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி முடிவுற்றது.

அதை தொடர்ந்து நேற்று போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுறாக பணியாற்றியவர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

தற்போது நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடை தேர்தலுக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனை கண்டித்து இன்று காலை திடீரென திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 

தகவல் அறிந்த கண்ட்டோன்மென்ட் காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறக்கினர்.

தொடர்ந்து ராஜேந்திரன் ஏற்கனவே திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அனுபவம் எனக்கு இருக்கிறது.

ஆனால் நான் தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அதை தள்ளுபடி செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திடீரென உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended