• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.

வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.

மைக்கேல்

UPDATED: Jul 25, 2024, 7:26:08 AM

பெரம்பலூர் மாவட்டம் 

குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

லெப்பைக்குடிக்காடு மெயின் ரோட்டில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்திற்கு கழனிவாசல், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், வயலூர், வசிஷ்டபுரம், திருமாந்துறை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளது.

குடிநீர் வசதி 

இந்த அலுவலகத்திற்கு தினமும் சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டிய, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டா சிட்டா வாங்கவும் வந்து செல்கிறார்கள்.

இந்த அலுவலகம் முன்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் குடிநீர் தொட்டி அகற்றப்பட்டுள்ளது. அதற்கான மேடை மட்டும் இன்னும் அப்படியே உள்ளது.

Today Latest District News  

இது குறித்து குன்னம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் குடிநீர் வசதி இன்றுவரை செய்து தரப்படவில்லை. 

புதிதாக வந்துள்ள மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டி அனைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டுமாய் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended