• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஒன்றிய குழு தலைவர் பூவை ஜெயக்குமார் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம்  வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம்.

ஒன்றிய குழு தலைவர் பூவை ஜெயக்குமார் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம்  வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம்.

சுந்தர்

UPDATED: Jun 27, 2024, 10:52:45 AM

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) க.வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஞானேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என.பி.மாரிமுத்து, வி.கண்ணியப்பன், பி.டில்லிகுமார், யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், உமாமகேஸ்வரி சங்கர், பிரியாசெல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்யபிரியா முரளிகிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், எம்.கண்ணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசியதாவது,

வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து,:

எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. சிஎம்டிஏ நிதி வருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. அந்த நிதி வருமா வராதா. அப்படி சிஎம்டிஏ நிதி வரவில்லை என்றால் சிறப்பு நிதியை ஒதுக்கி பணிகளை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கண்ணன்: 

காட்டுப்பாக்கத்தில் மழை நீர் கால்வாய் பணிகள் இன்னமும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது‌ மழைக்காலம் தொடங்குவதற்கு முன் மழை நீர் கால்வாய் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும். 

சத்யபிரியா முரளி கிருஷ்ணன்: 

மேல்மனம்பேடு பகுதியில் உள்ள பூங்கா, மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனை உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

உமா மகேஸ்வரி சங்கர் : 

நசரத்பேட்டை பகுதியில் மழைக்காலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மழை வெள்ளத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மழை பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார் கூறியதாவது: 

மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றவும், அவர்கள் குறிப்பிட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுப்பாக்கம், சென்னீர்க்குப்பம், நசரத்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதால் சிறப்பு திட்டங்கள் மூலம் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

 

VIDEOS

Recommended