தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 670 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த 2 பேர் கைது.

சுரேஷ் பாபு

UPDATED: Aug 14, 2024, 7:01:54 PM

திருவள்ளூர் மாவட்டம்

முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. 

அதன்படி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், பஜார் பகுதி உள்ளிட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Latest Crime News

அப்போது திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் அவர்களைப் பிடித்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட டைய்டால் (tydol) 670 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. 

News

இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, மவுலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (22), சுபாஷ் (25) என தெரிந்தது.

இதை அடுத்து சஞ்சய், சுபாஷ் ஆகிய 2 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended