• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தனுஷ்கோடியில் புயலால் சிதிலம் அடைந்த கிறிஸ்தவ ஆலயத்தை சுற்றுலா  பயணிகள் பார்வையிட ரூ. 36 லட்சத்தில் நடைபாதை.

தனுஷ்கோடியில் புயலால் சிதிலம் அடைந்த கிறிஸ்தவ ஆலயத்தை சுற்றுலா  பயணிகள் பார்வையிட ரூ. 36 லட்சத்தில் நடைபாதை.

கார்மேகம்

UPDATED: Apr 27, 2024, 11:56:03 AM

தனுஷ்கோடியில் புயலால் சிதிலம் அடைந்த கிறிஸ்தவ ஆலய கட்டிடத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக ரூ.36 லட்சத்தில் நடைபாதை அமைக்கும்  பணி தொடக்கம்

ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை

இந்த கடற்கரையில் புயலால் அழிந்து போன இந்த கம்பிப்பாடு கடற்கரையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக  கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக  புதைந்து காட்சியளித்து வருகின்றன.

ராமேஸ்வரம் வரக்கூடிய‌ சுற்றுலா பயணிகள் அனைவரும் தினமும் கார் வேன் ஆட்டோ பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி சென்று புயலால் அழிந்து போன கட்டிடங்களை பார்த்துவிட்டு செல்கின்றனர்

இந்த நிலையில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் உள்ள புயலால் அழிந்து போன கட்டிடங்களை பாது காக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகள் இந்த கட்டிடங்களை பார்க்க வசதியாகவும் ராமேஸ்வரம் நகராட்சி மூலம் கிறிஸ்தவ ஆலய கட்டிடத்தை சுற்றி ரூ.36 லட்சத்தில் மரத்தால் ஆன நடைபாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன புயலால் அழிந்து போன இந்த கிறிஸ்தவ‌ ஆலயத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் பணியை நகரசபை‌ சேர்மன் நாசர் கான் ஆணையாளர் கண்ணன் ஓவர்சீயர் ஜெகதீசன் உள்ளிட்டோர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கண்ணன் கூறும் போது புயலால் அழிந்த தனுஷ் கோடியில் உள்ள கட்டிடங்களை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகள் கட்டிடங்களை தொடாமல் பார்க்க வசதியாகவும் முதல் கட்டமாக கிறிஸ்தவ ஆலயத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இன்னும் சில வாரங்களுக்குள் இப் பணிகள் முடிவடைந்துவிடும் சுற்றுலா பயணிகள் நடைபாதை வழியாகவே சென்று திரும்பும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது

மேலும் சுற்றுலா பயணிகள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளிட்ட  பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

தனுஷ்கோடியில் புயலால் அழிந்து போன  பல‌ கட்டிடங்கள் பவளப்பாறை மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டது ஆகும்

இந்த கட்டிடங்களில் உள்ள கற்களை இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பலர் பெயர்த்து எடுத்து செல்கின்றனர் ஏனெனில் தண்ணீரில் போட்டால் இந்த கற்கள் மிதக்கும் என்பதால் இந்த கற்களை பெயர்த்து எடுத்து செல்கின்றனர்.

எனவே சுற்றுலா பயணிகள் சேதமடைந்த  கட்டிடத்தின் கற்களை பெயர்த்து எடுத்து செல்வதை தடுப்பதற்காகவே இங்கு நடைபாதை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

 

  • 2

VIDEOS

Recommended