- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேனி மாவட்டத்தின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளமான சுருளி அருவியில் நீர்வரத்து எதுவும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
தேனி மாவட்டத்தின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளமான சுருளி அருவியில் நீர்வரத்து எதுவும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
JK
UPDATED: Apr 26, 2024, 7:22:30 PM
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெப்பத்தை தணிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அருவிகளை தேடி வருகின்றனர்.
ஆனால் தேனி சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சம் சுருளி அருவி மற்றும் சுருளி ஆண்டவர் ஆன்மீக தளம் கோடிலிங்கம் போன்றவை சுற்றுலாத்தலமாகவும் ஆன்மிகத்தலமாகவும் பார்க்கப்படுகிறது
சுருளி அருவியில் மழை பெய்யாத காரணத்தால் நீர்வரத்து இல்லாமல் போனது.
தேனி மாவட்ட மக்களுக்கும் பெரும் குறையாக தான் உள்ளது. மழை பெய்தால் மட்டுமே சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாகும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் தற்பொழுது கோடை காலம் சுட்டெரிக்கும் வெயிலில் தேனி மக்கள் மட்டும் மல்லாது வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் வருகை தந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.