- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திடிரென_திமுக_பிரமுகர் நுழைந்து விவசாய போராட்டத்தில் பாஜக ஏன் வந்துள்ளன என கேட்டதால் கைகலப்பு.
திடிரென_திமுக_பிரமுகர் நுழைந்து விவசாய போராட்டத்தில் பாஜக ஏன் வந்துள்ளன என கேட்டதால் கைகலப்பு.
அஜித் குமார்
UPDATED: Jul 2, 2024, 4:37:22 AM
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயி சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினர்..
மேலும் வேளாண் பட்ஜெட் மானிய கோரிக்கையில் நெல் வெறும் 89கோடி ரூபாய் நிதி ஓதுக்கபட்டுள்ளன.
இது வேளாண் உற்பத்தியில் வெறும் 0.1சதவீம் தான் இதனால் காரிய பருவத்தில் மத்திய அரசு வழங்கிய 117 ரூபாயும் மாநில அரசு 30ரூபாய் வழங்கி தற்போது குவிண்டாலுக்கு 2457 ரூபாய் விலை கசப்பான உள்ளதாக கூறி விவசாய சங்கத்தினர் வேப்ப செடி உட்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசின் வேளாண் பட்ஜெட் காகிதத்தில் ராக்கெட் விட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது திமுகவை சேர்ந்த முதியவருக்கும் விவசாய சங்க ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக கரைவேட்டி கட்டிய நபருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தன
பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பபை சமசரம் செய்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டன.