ஊரணி குளம் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு வார காலம் அவகாசம்

ராஜா

UPDATED: Jul 10, 2024, 6:51:17 PM

Latest Theni District News 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள் புரம் கிராமத்தில் ஊரணி குளம் அமைந்துள்ளது.

இந்த ஊரணி குளத்தில் தேங்கும் நீரினை பயன்படுத்தி சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நிலத்தடி நீரின் மூலம் வாழை,தென்னை, முருங்கை உள்ளிட்ட பல்வேறு காய்கறி பொருட்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர்.

District News Headlines in tamil

பல வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த இந்த குளத்தினை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்பொழுது குளத்தினை தூர்வாரி சீரமைக்கும் பணியை மத்திய அரசின் திட்டம் 2.0 மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுள்ள குளத்தில் அரை ஹெக்டேர்க்கு மேல் ஆக்கிரமிப்பில் உள்ளது.

District News & Updates in Tamil 

இதனை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்றம் உத்தரவு பணிகளை மேற்கொள்ள வெள்ளையம்மாள்புரம் ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் செயல் அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஓடைப்பட்டி காவல் துறையினர் என அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டனர்.

Latest District News in Tamilஊரணி குளம் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு வார காலம் அவகாசம்

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நீங்களே ஒரு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தினை ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றம் செய்யப்படும் என கூறிச் சென்றனர்.

 

VIDEOS

Recommended