முத்துப்பேட்டை அடுத்த தொண்டியகாடு முனங்காடு  கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

ஜெயராமன் & தருண் சுரேஷ்

UPDATED: Apr 19, 2024, 6:53:33 AM

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தொண்டியகாடு ஊராட்சி முனங்காடு கிராமத்தில் தொண்டியகாடு - முனங்காடு சாலையை சீரமைக்கவும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தொண்டிய காடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த கிராமத்தில் உள்ள முனங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 274 நம்பர் பூத் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் அலுவலர்கள் இன்று காலை ஈடுபட்டனர்.

ஆனால் கிராம மக்கள் கூறியபடி யாரும் காலை 10 மணி வரை வாக்களிக்க யாரும் வரவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்துப்பேட்டை வட்டாட்சியர் குணசீலி நேரில் பார்வையிட்டார் மேலும் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் ஆனால் ஓட்டு போட வர மருத்துவிட்டனர்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த விளாங்ககாடு ஊராட்சி கிளார்க் வேதப்பன், வாக்கு சாவடி நிலைய அலுவலர் அம்சவள்ளியும் கிராம மக்கள் எடுத்த முடிவுக்கு கட்டுபட்டு ஓட்டு போட முதலில் மருத்தனர் பின்னர் வட்டாட்சியர் குணசீலி அறிவுறுதலுக்கு பின்னர் இந்த இருவர் மட்டுமே வாக்களித்தனர்.

இதனால் அங்கு திருத்துறைப்பூண்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்மணி மற்றும் அலுவலர்கள் முகாமிட்டுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended