• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு திருவாரூர் ஆட்சியர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம்  விழிப்புணர்வு .

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு திருவாரூர் ஆட்சியர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம்  விழிப்புணர்வு .

ஜெயராமன்

UPDATED: Jun 14, 2024, 11:19:06 AM

ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அனைவரும் ரத்த தானம் வழங்கலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்ததானம் வழங்கினார்.

தொடர்ந்து அவருக்கு இரத்ததானம் வழங்கிதற்கான சான்றிதழை கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

VIDEOS

Recommended