தென்காசி அருகே இன்ஸ்டா காதல்: மனைவி இரண்டாம் திருமணம் கணவன் தவிப்பு.

இரா.பாலமுருகன்

UPDATED: Jun 8, 2024, 12:06:55 PM

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியைச் சார்ந்தவர் திருமலைக் குமார் இவருக்கும் செங்கோட்டையைச் சார்ந்த சுமித்ரா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை பிறந்துள்ளது. 

பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க சுமித்ரா தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக திருமலை குமார் கடன் வாங்கி தனது மனைவியை கல்லுரையில் சேர்த்து படிக்க வைத்தார்.

இதனால் கடனாளியான திருமலைக்குமார் தனது மனைவியின் கல்விக் கடனை அடைக்க வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார். 

அதன்படி வெளிநாட்டில் வேலை செய்து தனது மனைவியின் கல்லூரி படிப்புக்கான கலவிக்கடனை அடைத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது மனைவி சுமித்ரா திருமலை குமாரின் தாயாருடன் திரிகூபுரத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்போது சுமித்ரா எப்போதும் செல்போனில் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி உள்ளார். அப்போது மதுரை பகுதியைச் சார்ந்த ஒரு வாலிபருடன் சுமித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்த பழக்கம் அதிகரித்து அவருடன் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமித்ரா செங்கோட்டையில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை இது பற்றி சுமித்ராவின் மாமியார் வெளிநாட்டில் உள்ள தனது மகன் திருமலை குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் உடனடியாக அவரது மாமியார் வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி சுமத்திராவின் செல்போன் எண்ணில் இருந்து திருமலை குமாருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு படம் வந்துள்ளது அந்த படத்தில் அவரது மனைவி சுமித்ரா மற்றொரு வாலிபருடன் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி இருந்துள்ளது.

உடனடியாக திருமலை குமார் அந்த செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலை குமார் தனது தாயாரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து சுமித்ராவின் தாயார் திருமலை குமாரை தொடர்பு கொண்டு நீங்கள் இனிமேல் எனது மகளை தொடர்பு கொள்ள வேண்டாம் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்று மட்டும் கூறிவிட்டு உடனே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். 

இதனால் செய்வது அறியாமல் திகைத்து நின்ற திருமலை குமார் தனது தாயார் மூலம் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் மனு ஒன்றை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி திருமலை குமாரின் தாயார் சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது அங்குள்ள காவலர்கள் இந்த புகாரை நீங்கள் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று கொடுங்கள் கூறியுள்ளனர்.

அதன்படி திருமலை குமாரின் தாயார் இது பற்றி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தென்காசி மகளிர் காவல் நிலைய போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended