கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலி

ராஜா

UPDATED: May 16, 2024, 10:16:09 AM

Latest Tamil News 

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி ஒத்தக்களம் அருகில் தென்னந் தோப்பிற்கு தோட்ட வேலைக்கு சென்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார், 27 வயது நிரம்பிய இளைஞர் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அதே மின்சார வேலியில் சிக்கி அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமைமாடு ஒன்றும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

Theni District News

உயிரிழந்த கிருஷ்ணகுமாருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருப்பதாக கூறப்படுகின்றது,

மேலும் மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கினாலும் தனியார் தென்னந்தோப்பு உரிமையாளரின் அஜாக்கிரதையால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, உயிரிழந்த கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் சடலத்தை எடுக்க விடாமல் அங்கே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

District News in Tamil

இச்சம்பவம் குறித்து கூடலூர் காவல் ஆய்வாளர் வனிதா மணி தலைமையிலான போலீசார் உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து இளைஞரும், எருமை மாடும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended