கொள்ளிடம் ஆற்றில் நிரம்பி வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

சண்முகம்

UPDATED: Aug 2, 2024, 6:49:59 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம்

அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நிரம்பி வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. சிதம்பரம் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கர்நாடகத்தில் செய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளதால் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது

மேட்டூர் திருச்சி கும்பகோணம் வழியாக சிதம்பரம் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் கலந்து பழையார் இடத்தில் கடலில் தண்ணீர் கலக்கிறது இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் ஆறு

இரண்டு திராவிட அரசுகள் இருந்தும் எந்த அரசும் இதுவரை தடுப்பணை கட்டவில்லை கொள்ளிடம் ஆற்றில் அதிகாரிகள் வருகிறார்கள் மந்திரிகள் வருகிறார்கள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறுகிறார்கள் அத்துடன் அவர்கள் சென்று விடுகிறார்கள்

5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டியிருந்தால் தண்ணீரை தேங்க வைத்து சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் மற்றும் லட்சக்கணக்கான விளைநிலங்கள் கால்நடைகள் பல வகையான பயிர் வகைகள் பொதுமக்கள் அதிக அளவு பயன்பெறுவார்கள்.

திமுக | அதிமுக

மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் இதுவரை ஆண்ட அரசுகள் எதுவும் இதுவரை எந்த தடுப்பனையும் கட்டவில்லை தண்ணீர் புகுந்த கிராமங்களுக்கு நஷ்ட ஈடாக 5 ஆயிரம் தந்துவிட்டு அத்துடன் அரசு வெளியேறி விடுகிறது 

பல போராட்டங்கள் நடைபெற்றும் இதுவரை அரசுகள் தடுப்பணை கட்ட வில்லை லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது பேட்டி அளிப்பவர் சஞ்சீவ் வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்தவர்கள்.

 

VIDEOS

Recommended