- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருப்பாச்சூர் கிராமத்தில் அரசு சவுடு மண் குவாரிக்கு அனுமதி தரக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் மனு.
திருப்பாச்சூர் கிராமத்தில் அரசு சவுடு மண் குவாரிக்கு அனுமதி தரக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் மனு.
சுரேஷ் பாபு
UPDATED: Jun 7, 2024, 7:58:54 PM
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் மூன்று முறை அரசு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது.
அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக பள்ளம் எடுத்தும், அதிக அளவில் மண்ணும் எடுத்தும் ஆழப்படுத்தினர்.
இதனால் ஏரியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாய நிலங்களும் போதிய நீர் பாசன வசதி இல்லாமல் 200 ஏக்கர் விவசாய நிலம் வீட்டு மனைகள் ஆக்கப்பட்டது.
இதனால் கடந்த காலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டன.
மேலும் இப்பகுதியில் வாழும் வனவிலங்குகளும் அதிக அளவில் இருப்பதால் நீரின்றி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே திருப்பாச்சூர் கிராமத்தில் அரசு சவுடு மண்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என அந்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேட்டி : 1. முனியம்மா
2. தமிழழகன் - திருப்பாச்சூர் கிராமம்