தொழிற்சங்கம் வைத்த 63 பேர் பணிநீக்கம் செய்த ஸ்பெயின் நாட்டு நிறுவனம்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 4, 2024, 7:19:46 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மெண்டார் பிரிண்டிங் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது .அதில் சுமார் 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தை ஆரம்பித்த காரணத்தினால் சுமார் 63 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

இதனை கண்டித்து பல்வேறு ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றது. எதற்கும் அசைந்து கொடுக்காத மெண்டார் பிரின்டிங் அண்ட் லாஜிஸ்டிக் நிறுவனம் தொழிற்சாலை விதிகளின்படி நடக்காமல் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

பலவிதமான போராட்டங்களை நடத்தியும், நிறுவனம் எந்த விதமான பேச்சு வார்த்தைக்கும் தொழிலாளர்களை அழைத்து பேசாததால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தை இன்று தொடங்கினர்.

மெண்டார் பிரிண்டிங் அண்ட் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் சட்ட விரோத செயல்களை தடுக்கவும், தொழிற்சங்கம் வைத்த 63 பேரின் டிஸ்மிசை ரத்து செய்யவும்,, தொழிலாளர் துறையின் உத்தரவுகளை அமலாக்க படுத்தவும், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் , நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக CITUவின் மாநில செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசும் தொழில்துறை அமைச்சரும் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. தொழிலாளர்கள் நலன் எப்படி போனால் என்ன என்ற வகையில் உள்ளனர். கூடிய விரைவில் சாம்சங் தொழிற்சாலைக்கு எதிராக நடந்த போராட்டம் போல் இதுவும் மிகுந்த வலு கொண்ட போராட்டமாக மாறும் என எச்சரித்தார் . 

பேட்டி கண்ணன். சிஐடியு மாநில துணை செயலாளர்.

 

VIDEOS

Recommended