• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சாம்சங் ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வீறுகொண்டு எழுந்து காஞ்சிபுரம் பிராதன சாலையில் சாலை மறியலாக மாறியது.

சாம்சங் ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வீறுகொண்டு எழுந்து காஞ்சிபுரம் பிராதன சாலையில் சாலை மறியலாக மாறியது.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 1, 2024, 11:54:39 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ், 8 மணி நேரம் பணி நிர்ணயிப்பது என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 19 நாளாக சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடைபெறும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் சாம்சங் வேலை நிறுத்தம் சுமூக தீர்வு காண, கூட்டு பேர உரிமை, சங்க உரிமையை உறுதி செய்திட தமிழக அரசு இதில் தலையிட வலியுறுத்தி, இன்று தமிழக முழுவதும் மாநிலம் தழுவிய, மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு தொழிற்சங்கம் ஏற்கனவே அறிவித்தது. 

சாம்சங் ஆலை 

அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே திரண்டு வந்த சாம்சங் தொழிலாளர்களையும் சிஐடியு சங்கத்தினர்களையும் தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயற்சி செய்தனர் .

தடையை மீறி 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் தேரடி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Breaking News Today In Tamil 

மேலும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் சாம்சங் விவகாரத்தில் தலையிடக் கோரி கோஷம் எழுப்பினர்.

சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended