- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 57 லட்சம் நிதியில் தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரக கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்.
57 லட்சம் நிதியில் தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரக கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்.
கார்மேகம்
UPDATED: May 4, 2024, 8:40:38 AM
தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரக கோவிலில் ரூ.57 லட்சம் நிதியில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இராமநாதபுரத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவிபட்டினம் இங்கு ராமபிரான் பூஜை செய்து வழிபாடு நடத்திய நவபாஷான நவக்கிரக கோவில் அமைந்துள்ளது
கடலுக்குள் அமைந்துள்ள இந்த நவபாஷான நவக்கிரக கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இக் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஒதுக்கப்பட்ட ரூ. 57 லட்சம் நிதியில் மேற்கூரை மற்றும் நவக்கிரக கோவிலை சுற்றி தடுப்புச்சுவர் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் தொடங்கி கடந்த 2 மாதத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகின்றன
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரக கோவிலில் ரூ.57 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன
இதில் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் மேற்கூரை அமைக்கும் பணி ஆர்ச் அமைத்தல் மங்களூர் ஓடுகள் பதித்தல் பூச்சு பூசுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த திருப்பணிகள் இன்னும் 3 மாதத்திற்குள் முழுமையாக முடிவடைந்து விடும் இவ்வாறு அவர் கூறினார்.