விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு.

அந்தோணி ராஜ்

UPDATED: Nov 8, 2024, 4:07:02 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதி புல்லுப்பத்தி மலை இப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன.

இவ்விவசாய நிலங்களை அப்பகுதி பொதுமக்கள் குத்தகை எடுத்து தென்னை மா பலா மற்றும் ஊடுபயிராக கத்தரிக்காய் விளைவித்து வருகின்றனர்.

இதனை காட்டுப்பன்றிகள் காட்டு மாடு மான் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு விவசாய நிலங்களை சுற்றி வலை போன்ற அமைப்புடைய வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அய்யனார் கோவில் ஆறு உட்பட குரு சிறு சிறு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இவ்வாறு ஓடைகளில் ஓடும் நீரில் மலைப்பகுதியில் இருந்து மலைப்பாம்புகள் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது 

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல்லுப்பத்தி மலைப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் பராமரிப்பு பணிக்காக சென்ற விவசாயிகள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு உயிருக்கு போராடியவாறு சிக்கி இருந்ததைக் கண்ட விவசாயிகள்.

மலைப்பாம்பு

உடனடியாக இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்களான பிரவீன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த விலங்கு நல ஆர்வலர் பாம்பு உயிருக்கு போராடுவதை கண்டு மேலும் இரு விலங்கு நல ஆர்வலர்களான சதீஷ் மற்றும் பாண்டி ஆகிய இருவரை உதவிக்கு அழைத்து பாம்பு சிக்கியிருந்த வலையில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக துண்டித்து பாதுகாப்பான முறையில் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மலைப்பாம்பிற்கு எவ்வித சேதாரமும் இன்றி மீட்டு ராஜபாளையம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

VIDEOS

Recommended