• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மன்னார்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கோஷம் . 

மன்னார்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கோஷம் . 

தருண் சுரேஷ்

UPDATED: Nov 3, 2024, 6:29:15 PM

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடி அருகே உள்ள இராமபுரம் ஊராட்சியில் வாஞ்சியூர் கிராமம் உள்ளது இதில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமத்தில் உள்ள சாலை அமைத்து 20 வருடங்களை கடந்துவிட்டதால் குண்டும் குழியுமாக இருக்கிறது மழை பெய்து சாலை சேறும் சகதியுமாக உள்ளது.

இதில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் வீட்டு பகுதிகளில் மழைநீர் தேங்கி வடிய வழியில்லாத காரணத்தில் கொசு பெருகி கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றர்.

இதனால் கிராமத்திற்கு சாலை அமைத்துத்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று ஊராட்சி ஒன்றியம் கடந்த ஆண்டு ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கியது. இருப்பினும் இன்னும் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை.

சாலையினை உடனடியாக அமைக்கவேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் 50திற்கும் மேற்பட்டோர் சாலை அமைத்து வடிகால் வசதி ஏற்படுத்தி தரவலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது ஒவ்வொருமுறை உள்ளாட்சி தேர்தல் வரும்போது வாக்கு கேட்டு வருகின்றனர் .

பின்னர் இந்த பகுதிமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரமரறுக்கின்றார் ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் அப்படி செய்யதவறினால் மிக பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தஉள்ளதாக தெரிவித்தனர் .

சாலை வசதி செய்துதரக்கோரி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

பேட்டி பாலாஜி கிராமவாசி கருணாநிதி கிராமவாசி ஜோசப் கிராமவாசி.

 

VIDEOS

Recommended